41 வயதில் கர்ப்பமான நடிகை நமீதா – வைரலாகும் புகைப்படங்கள்

2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.

விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, நமீதா குறிப்பிட்டு இருந்தார்.

பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை மணந்து கொண்டார்.

2017-ம் ஆண்டு நமீதா-வீரேந்திர சவுத்ரி திருமணம் நடந்தது. இந்நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது பிறந்தநாளில் அறிவித்திருக்கிறார் நமீதா. ”தாய்மை… புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது. நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு நாள் வேண்டினேன். உன் மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகள், அனைத்தையும் என்னால் உணர முடிகிறது. நான் இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீ உருவாக்குகிறாய்” என்று குறிப்பிட்டு அந்த மகிழ்ச்சியான செய்தியை நமீதா அறிவித்திருக்கிறார். இது பற்றி அறிந்ததும் நமிதாவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools