46வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 46-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க இருக்கிறது. புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்து கொள்ள உள்ளார்.

கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் தேவி பாரதி (நாவல்), சந்திரா தங்கராஜ் (சிறுகதை), தேவதேவன் (கவிதை), சி.மோகன் (மொழிபெயர்ப்பு), பிரளயன் (நாடகம்), பா.ரா.சுப்பிரமணியன் (உரைநடை) ஆகிய 6 பேருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளுடன் தலா ரூ.1 லட்சமும், 9 பேருக்கு பபாசி சார்பில் விருதுகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.

அதன்படி, கலைஞரின் பொற்கிழி விருதுகளில் 100-வது விருது இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளது. நாளை தொடங்கும் இந்த புத்தக கண்காட்சி வருகிற 22ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொது மக்கள் பார்வையிடலாம். கடந்த ஆண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 200 அரங்குகளுடன் மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அதில், சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய அரங்கு ஒன்று பிரத்யேகமாக அமைக்கப்பட இருக்கிறது.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools