X

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஆகியோர் இன்று (18-03-2026) நேரில் சந்தித்துப் பேசினர்.

இந்த ஆலோசனையின் முடிவில், வரவிருக்கும் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதென உடன்பாடு எட்டப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது.