6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதி இடைத்தேர்தல்

6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 6-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இடைத்தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அரசு அறிக்கை அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் நடைபெறும் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அன்றிலிருந்து அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 14ம் தேதி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 15ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை வாபஸ் பெற அக்டோபர் 17ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பீகார் (மோகமா, கோபால்கஞ்ச்), மராட்டியம் (அந்தேரி கிழக்கு), அரியானா (அதம்பூர்), தெலுங்கானா (முனுகோட்), உத்தரபிரதேசம் (கோலா கோக்கர்நாத்), ஒடிசா (தாம்நகர்) ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools