7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தூதரக உறவை தொடரும் ஈரான் – மாலத்தீவுகள்

ஈரானின் நட்பு நாடாக இருந்த மாலத்தீவுகள் சுமார் 40 ஆண்டுகள் அதனுடன் தூதரக உறவை கொண்டிருந்தது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் விவகாரத்தில் அதன் கொள்கைகள் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மாலத்தீவு கருதியது. இதனால் கடந்த 2016-ம் ஆண்டு இரு நாடுகளும் தங்களது தூதரக உறவை முறித்துக் கொண்டன.

இந்தநிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.சபையின் 78-வது கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஈரான் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் மாலத்தீவுகள் வெளியுறவு மந்திரி அகமது கலீல் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தூதரக உறவை தொடங்குவதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் இரு நாடுகளின் நலன்கள் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news