X

29 கி.மீ தூரம் கொண்ட பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்து 7 வயது சிறுவன் சாதனை!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் இஷாங்க் சிங் (Ishank Singh), இந்தியா – இலங்கை இடையிலான 29 கி.மீ தூரம் கொண்ட பாக் ஜலசந்தியை (Palk Strait) வெறும் 9 மணி நேரம் 50 நிமிடங்களில் நீந்திக் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

நேற்று (ஏப்ரல் 30, 2026) அதிகாலை இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய இஷாங்க், மதியம் 1:50 மணிக்கு இந்தியாவின் தனுஷ்கோடியைச் (அரிச்சல்முனை) சென்றடைந்து, இந்தச் சாதனையைப் புரிந்த உலகின் மிக இளவயது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஜவஹர் வித்யா மந்திர் பள்ளியில் 3-ஆம் வகுப்பு பயிலும் இந்தச் சிறுவன், இதற்கு முன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெய் ஜஸ்வந்த் வைத்திருந்த சாதனையை முறியடித்து, ‘யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் ஃபோரம்’ (URF) மூலம் ‘மிக இளவயது மற்றும் வேகமான நீச்சல் வீரர்’ என்ற சான்றிதழைப் பெற்றுள்ளார்.