81 வயதான திருமதி கே.எஸ்.தனது மகளுடன் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களில், அவருக்கு நடப்பதிலும், அறிவாற்றல் செயல்பாட்டிலும் சிரமம் ஏற்பட்டு, அது அதிகரித்த வண்ணமும் இருந்தது. இதனால் தள்ளாட்டம் ஏற்பட்டு அடிக்கடி கீழே விழும்படியான நிலை ஏற்பட்டது. இதனால் அவர் வீச்ழ்ச்சிக்கு ஆளாக நேரிட்டது. இரண்டு முழங்காலிலும் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவ வரலாற்றினைத் தவிர்த்து, வேறு எந்த தொந்தரவும் இல்லாமல் அவரது வாழ்க்கை சாதாரணமாகவே இருந்தது.
அமெரிக்காவில் அவர் கலந்தோலாசித்த மருத்துவர்கள் மேற்கூரிய நடைத்தள்ளாட்டத்தோடு, திருமதி கே.எஸ் அவர்களின் வலது காதின் கேட்கும் திறன் குறையும், வலது கையைப் பயன்படுத்தும் போது உண்டான ஒருங்கிணைப்புக் குறைபாட்டையும் கவனித்தனர். மேலும் பரிசோதனையில், அவருக்கு மூளையில் பெரிய கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர். அந்த கட்டி, செவியின் கேட்கும் திறனை வழங்கும் நரம்பியல் உருவாகியிருந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைத்தனர். திருமதி கே.எஸ் அவர்களும், அவரது குடும்பத்தினரும், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனையைப் பெற்றனர். காணொளி வாயிலாக, சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையின் மருத்துவர் திரு.கிரிஷ் ஸ்ரீதரிடம் நிகழ்ந்த சில கலந்தாய்வுக்குப் பிறகு, அவரிடமே சிகிச்சை பெறலாம் என்ற முடிவனை எடுத்தனர்.
இன்ஸ்ட்யூட் ஆஃப் ப்ரெயின் & ஸ்பைனின் வழிகாட்டியும் இருக்குநருமான டாக்டர்.கிரிஷ் ஸ்ரீதர் இந்த அறுவை சிகிச்சைப் பற்றி கூறுகையில், “நாங்கள் செவி நரம்பில் ஏற்பட்ட ஒரு பெரிய கட்டியை அகற்ற வேண்டியிருந்தது. இந்த அறுவை சிகிச்சை செய்து முடிக்க சுமார் 10 மணி நேரம் ஆனது. இத்தகைய அறுவை சிகிச்சை மேற்கொள்வது எப்போதுமே சவாலானது. அதிலும், குறிப்பாக திருமதி கே.எஸ் அவர்களுக்கு ஏற்பட்டது போன்ற பெரிய கட்டியாக (விட்டம் 4.5 செ.மீ.க்கு மேல்) இருக்கும் பட்சத்தில், அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சிக்கல் வாய்ந்ததாக இருக்கும். உயர்நிலை இயக்க நுண்ணோக்கியைப் பயன்படுத்திக் கட்டியை அகற்றும் போது, விழுங்குதல், பேச்சு மற்றும் முகத்துடன் தொடர்புடைய முக்கியமான அதிநுண் நரம்புகள் பாதிப்படையாதவாறு கவனத்துடன் செயற்பட்டதோடு, நரம்பியல் மண்டலத்தைத் தொடர்ந்து கண்காணித்தபடி, அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம்.
வெற்றிகரமான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, இரண்டு நாட்களில் திருமதி கே.எஸ், நடக்கத் தொடங்கினார். ஏழாவது நாளில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். மருத்துவரின் ஆலோசனைக்கு இணங்க, தனது பிசியோதெரபி அமர்வுகளைத் தொடர்ந்து, நல்ல ஆரோக்கியத்துடன் திடமாக அமெரிக்கவுக்கு திரும்பினார்.
பலர், தங்களுக்கோ தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ 70 வயதுக்கு மேல் இருந்தால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பயப்படுகின்ற்னர். தற்போது, சிறப்பான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தொழில்நுட்பமும், தொடர் கண்காணிப்புக்கான வசதியும், மயக்க மருந்து அளிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும், அறுவை சிகிச்சையின் பொழுது நேரும் அபாயங்களைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளன. மிக ஆபத்தான மூளை கட்டிகளுக்குக் கூட, நோயாளி மருத்துவ ரீதியாக ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில், எந்த வயதினராக இருந்தாலும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்படக்கூடும்.” என்றார்.
