தூத்துக்குடியில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவன் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி முதல் காணாமல் போயுள்ளார். இது குறித்து மாணவரின் பெற்றோர் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
மாணவன் நான்கு நாட்கள் கடந்தும் மாணவன் கண்டுபிடிக்கப்படாததற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் கோரிக்கையை விடுத்திருந்தனர்.இந்த நிலையில்தூத்துக்குடியில் விடுதியில் இருந்து காணாமல் போன 8ம் வகுப்பு மாணவர், தெற்கு காவல் நிலைய போலீசாரின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
காணாமல் போன சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு.30.10.2026 அன்று, தூத்துக்குடி மாவட்டம், ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியில் தங்கி, 8-ஆம் வகுப்பு படித்து வந்த ஜீவா என்ற 13 வயது சிறுவன், படிப்பில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக விடுதியிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் உடனடியாக சிறுவன் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவனைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காவல்துறையினரின் துரிதமான மற்றும் சிறப்பான நடவடிக்கையின் காரணமாக, 02.11.2026 அன்று சிறுவன் பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அவரது பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.
இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.