X

பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 25 வயதான ராகேஷ் என்ற இளைஞர் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் நன்றாக பேட்மிண்டன் விளையாடி வரும் ராகேஷ் திடீரென சரிந்து கீழே விழுவது பதிவாகியுள்ளது.

உடனடியாக அவரது நண்பர்கள் ராகேஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போதைய காலகட்டத்தில், இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.