X

நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தாயார் மோகினி இன்று காலமானர். அவருக்கு வயது 84.

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் – தாய் மோகினி. இவர்கள் சென்னை பாலவாக்கத்தில் தனியாக வசித்து வந்த நிலையில், தந்தை சுப்பிரமணியம் கடந்த 2020 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் காலமானார்.

இந்த நிலையில், அஜித்தின் தயாரான மோகினி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் அவரது தாயாருக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

அஜித்தின் தாயார் மோகினி மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.