தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான கண்ணன் ரவி தலைமையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரம்மாண்டமான மாநகரமான துபாயை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் கண்ணன் ரவி குழுமம் – துபாய்க்கு வருகை தரும் சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள்- சுற்றுலா பயணிகள்- விருந்தினர்கள்- நண்பர்கள்- ஆகியோரின் வணிக ரீதியிலான மற்றும் நட்பு ரீதியிலான சந்திப்புகளை மறக்க முடியாத இனிமையான நிகழ்வுகளாக மாற்றி அமைக்கும் வகையில் பிரத்யேக நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் ‘பாந்தர்ஸ் ஹப் ‘ ( Panthers Hub) எனும் பொழுதுபோக்கு மையம்- ATK 2 ஐந்திணை உணவகம் ஆகியவற்றை நேர்த்தியான கலை நயத்துடன் வடிவமைத்துள்ளனர்.
இதனை கடந்த ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி அன்று நடைபெற்ற பிரம்மாண்டமான அறிமுக விழாவில் பாலிவுட் திரையுலகின் கிங் கான் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஷாருக் கானுடன் இயக்குநர் வெங்கட் பிரபு – பிரேம்ஜி- தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு – கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான இந்திய திரையுலக மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பாந்தர்ஸ் ஹப் – ஐந்திணை உணவகம் இவை இரண்டும் தெற்காசிய நாடுகளின் அடையாளமாக திகழும் வகையில் சர்வதேச அளவிலான வர்த்தகத்திலும், இந்திய திரைப்படங்களின் தயாரிப்புத் துறையிலும் தன்னிகரற்று விளங்கும் கண்ணன் ரவி குழுமம் உருவாக்கி இருப்பதால்.. இந்த குழுமத்தின் நன்மதிப்பு சர்வதேச அளவில் புதிய உயரங்களை எட்டி இருக்கிறது.