அதிமுக-வின் செய்தி தொலைக்காட்சியை விமர்சித்த விஷால்

ரஜினி, கமலுக்கு அடுத்து அந்த அரசியலில் நுழைய காத்திருப்பவர் நடிகர் விஷால். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கிய அவர் கடைசி நேரக் குளறுபடியால் போட்டியிடாமலேயே வெளியேறினார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும் விஷாலுக்கும் மோதலும் ஏற்பட்டது.

அதன் பின்னர் எந்தத் தேர்தலும் வரவில்லையென்றாலும் அ.தி.மு.க.வுக்கும் விஷாலுக்கும் இடையே பனிப்போர் இருந்து வருவதாகவே பலரும் கூறி வந்தனர்.

இந்த நிலையில் ட்விட்டரில் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள ஒரு பதிவு, அ.தி.மு.க.வைச் சீண்டுவது போல அமைந்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

“மற்றுமொரு செய்திச்சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் மாதச் சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பைத் தொடங்க முடிகிறது? 2019ஆம் ஆண்டுக்காகக் காத்திருக்கிறேன்”.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்த அ.தி.மு.க. கட்சியின் அதிகாரபூர்வ டி.வி.யாக நியூஸ் ஜெ எனும் செய்திச் சேனல் தொடங்கப்பட்டிருக்கிறது. அதே நாளில்தான் நடிகர் விஷால் இப்படியாகக் கருத்து கூறியுள்ளார். எனவே, அ.தி.மு.க.வைத்தான் விஷால் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என்று அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools