தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னையில் வசிக்கும் பலர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற, சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி விட்டனர். இதையடுத்து சில தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்ந்துள்ளதாக பயணிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை – தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ரூ.5,354 ஆக இருந்த கட்டணம் இன்று ரூ.17,527 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.13320, திருச்சிக்கு ரூ.14237, சென்னை – கோவைக்கு ரூ.12,027 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இத்தகைய கட்டண உயர்வின் போதும், பல விமானங்களில் டிக்கெட் கிடைக்காத நிலையே இருப்பதால், பயணிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.