அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி வர்த்தகனத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாமல் பல்வேறு நாட்டு கப்பல்கள் தவித்து வரும் நிலையில், இந்திய கப்பல்கள் அப்பாதையை கடக்க ஈரான் சிறப்பு அனுமதி அளித்தது.
இதையடுத்து இந்திய கொடி ஏந்திய ஷிவாலிக், நந்தா தேவி ஆகிய இரண்டு எல்பிஜி டேங்கர் கப்பல்கள் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வந்தன. இதன் மூலம் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து கூடுதல் எல்பிஜி இறக்குமதி செய்ய இந்திய தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் இருந்து எல்பிஜி ஏற்றி வந்த PYXIS PIONEER சரக்குக் கப்பல், மங்களூர் துறைமுகத்தை வந்தடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.