X

அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் – 24 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 2,425 மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் குறித்த பகுப்பாய்வில், கடந்த நான்கு ஆண்டுகளில் (2021 நவம்பர்-டிசம்பர் முதல் 2025 நவம்பர்-டிசம்பர் வரை) 24 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 2,425 மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 177 கல்லூரிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், குறைந்த மாணவர் சேர்க்கை மற்றும் மோசமான தேர்ச்சி விகிதம் கொண்ட இத்தகைய கல்லூரிகளை கவுன்சிலிங்கில் அனுமதிக்கக் கூடாது என்றும், கல்வித் தரத்தை உயர்த்த அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.