X

கிக் தொழிலாளர்களின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்த அண்ணாமலை

பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவரும், வீ த லீடர் அமைப்பின் தலைவருமான அண்ணாமலை, இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் கிக் தொழிலாளர்களின் (Gig Workers) எதிர்காலம் குறித்துத் தன் கவலையையும் கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் தற்போது சுமார் 80 லட்சம் பேர் டெலிவரி உள்ளிட்ட கிக் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், 2030-ஆம் ஆண்டிற்குள் இவர்களின் எண்ணிக்கை இரண்டரை கோடியாக உயரும் என நிதி ஆயோக் அறிக்கை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இத்தகைய பணிகளை தானியங்கி ரோபோட்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் மேற்கொள்ளும்போது, இத்தனை கோடி மக்களின் வேலைவாய்ப்புக்கும் வாழ்வாதாரத்திற்கும் என்ன மாற்றீடு கிடைக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகள் இப்போதே திட்டமிட்டுச் செயல்பட வேண்டும் என்றும், இத்தகைய அடித்தட்டு தொழிலாளர்களின் நலனுக்கான அரசியலையே தான் முன்னெடுக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.