X

2026-27 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை அறிவிப்பு

தமிழகத்தில் 2026-27 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (SSLC) மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு (HSE) பொதுத்தேர்வு கால அட்டவணையைத் தேர்வுத்துறை இயக்குநரகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மார்ச் 3-ஆம் தேதி தொடங்கி மார்ச் 29-ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மார்ச் 17-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. மேலும், 11-ஆம் வகுப்பு அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 5 முதல் ஏப்ரல் 1 வரை நடத்தப்படவுள்ளன.

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 18 வரையிலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 26 வரையிலும் முழுமையாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பொதுத்தேர்வுகளும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என்றும், மாணவர்களுக்கு வினாத்தாள் வாசிக்க 10.00 முதல் 10.10 மணி வரையும், விவரங்களைச் சரிபார்க்க 10.10 முதல் 10.15 மணி வரையும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை, பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 20-ஆம் தேதியும் தற்காலிகமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.