X

‘க்டெங்கா’ தடுப்பூசி பயன்பாட்டிற்கு ஒப்புதல்

இந்தியாவில் டெங்கு காய்ச்சலுக்கு எதிரான முதலாவது தடுப்பூசியான ‘க்டெங்கா’ (Qdenga) பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

4 வயது முதல் 60 வயது வரையிலான நபர்களுக்குச் செலுத்தும் வகையில் இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகளவில் டெங்கு பாதிப்பால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வரும் நிலையில், இந்நோயைக் கட்டுப்படுத்தவும், தீவிர பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கவும் இந்தத் தடுப்பூசியின் வருகை மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.