பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது மனைவி பொற்கொடி தமிழக பகுஜன் சமாஜ் கட்சி என்ற பெரியல் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, திரு.வி.க. நகர் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட உள்ளார். இன்று வெளியான 17 பேர் கொண்ட 3ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பொற்கொடி திரு.வி.க.நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் அதிக அளவில் உள்ளனர். முன்னதாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் ஆம்ஸ்ட்ராங் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று இருப்பதால், போற்கொடியை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைப்பதன் மூலம், ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக வாக்குகள் ஒன்று சேர்ந்தால் இந்த தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.