X

அருண் ஐஸ்க்ரீம் கின்னஸ் உலக சாதனை! -15 ஆண்டுகள் சாதனையை முறியடித்த சென்னை பள்ளி மாணவர்கள்!

இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் கோடிக்கணக்கானமக்களால்விரும்பப்படும் ஐஸ்கிரீம் பிராண்டான அருண் ஐஸ்கிரீம்ஸ், ‘மிக நீண்ட வரிசை’தொடரின்ஒருஅங்கமாகஇடம்பெற்றுமக்கள்ஐஸ்கிரீம் சுவைக்கும் நிகழ்வின்’ ஒரு பகுதியாக இச்சாதனைநிகழ்த்தப்பட்டிருக்கிறது. சென்னைமாநகரில்4,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள்அருண்ஐஸ்கிரீமின்பல்வேறுதயாரிப்புகளைசுவைத்துமகிழும்நிகழ்வாகஇந்த கின்னஸ் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

சுத்தமானஅசல் பால் மற்றும் க்ரீம் கொண்டு தயாரிக்கப்படுகின்ற அருண் ஐஸ்கிரீமின் பட்டர்ஸ்காட்ச் சாக்லேட் சுவை கொண்ட ஜாலி டிரெயினை குழந்தைகள் ருசித்தனர். இது ஒரு தனித்துவமான சாதனை படைப்பாகும். குழந்தைகள் ஒரு நிமிடம் தொடர்ந்து ஐஸ்கிரீமை உட்கொண்டதால் இந்த சாதனை அடையப்பட்டது. இந்த முயற்சியின் போது, பங்கேற்பாளர்கள் ஒரு மனிதச் சங்கிலியை உருவாக்கி, தங்கள் வலது பக்கத்தில் இருப்பவருக்கு கைகளைப் பிடித்துக் கொண்டு ஐஸ்கிரீமை வழங்கினர், இது தொடர்ச்சியான, ஒருங்கிணைந்த சங்கிலியை உருவாக்கியது.

இச்சாதனை குறித்து ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆர்.ஜி. சந்திரமோகன் கூறுகையில், “ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் 4000 குழந்தைகள் ஒருங்கிணைந்து ஒரு கின்னஸ் சாதனை படைப்பதைப் பார்க்கும் இந்நேரம் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியான, மனதை நெகிழச் செய்யும் ஒரு தருணமாகும். நிலையான உயர்தரம் மீதும் மற்றும் அருந்தும் அனைவருக்கும் ஐஸ்கிரீம் வழங்கும் நிகரற்ற மகிழ்ச்சி ஆகியவற்றின் மீதான அர்ப்பணிப்பு எங்களது பயணத்தின் உந்து சக்தியாக எப்போதும் இருந்து வருகிறது,” என்றார்.

முந்தைய சாதனை 15 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் சுமார் 2,500 மாணவர்களுடன் படைக்கப்பட்டது. கின்னஸ் உலக சாதனையை இங்கிலாந்து கின்னஸ் குழுவைச் சேர்ந்த திரு. ரிச்சர்ட் வில்லியம் ஸ்டென்னிங் மற்றும் புனே கின்னஸ் குழுவைச் சேர்ந்த மிலிந்த் வெர்லேகர் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தனர்.

நாராயணா குழுமப் பள்ளிகள், நெல்லை பள்ளி, ராமச்சந்திரா பள்ளி, சுதா நந்தா வித்யாலயா, வளரும் மனம், எஸ்வி பள்ளி, வேல்ஸ் குளோபல் மற்றும் பத்மா சேஷாத்ரி பால பவன் சீனியர் செகண்டரி பள்ளி உள்ளிட்ட பங்கேற்கும் பள்ளிகளின் முன்னிலையில், ஹட்சன் அக்ரோ புராடக்ட்டின் துணைத் தலைவர் திரு. ச. சத்யனுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது.

சில்லறை வர்த்தக செயல்பாட்டில் வலுவான இருப்பையும், நுகர்வோரின் பல்வேறு விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் பல்வேறு வகைகள், சுவைகளை உள்ளடக்கிய தயாரிப்புகளின் பரந்த தொகுப்பையும் கொண்டு இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் பிராண்டுகளில் ஒன்றாக அருண் ஐஸ் கிரீம் திகழ்கிறது. அருண் ஐஸ் கிரீம்ஸின் பெருமைக்கு, இந்த கின்னஸ் உலக சாதனை மேலும் ஒரு மகுடத்தைச் சேர்க்கிறது.