X

அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான `செக்கச்சிவந்த வானம்’ நல்ல வரவேற்பை பெற்றது. அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக `தடம்’ ரிலீசாக இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது.

இதுதவிர அருண் விஜய் `வா டீல்’, `சாஹோ’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் `அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த நிலையில், அருண் விஜய்யின் பிறந்தநாளான நேற்று அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. `பாக்ஸர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை விவேக் இயக்குகிறார்.

அருண் விஜய் பாக்ஸராக நடிக்கும் இந்த படத்திற்கு லியோன் இசையமைக்க, மார்குஸ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மதன் படத்தொகுப்பையும், பாலச்சந்தர் கலை பணியையும் மேற்கொள்கின்றனர். எலெக்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.