கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லை பிரச்சினை மாநில மகாஜன் கமிட்டி மூலம் முடிவடைந்துள்ளது என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-
பெலகாவி விவகாரத்தில் சமரசம் என்பது கிடையாது. மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் அணுகியுள்ளது. ஆனால், மகாஜன் அறிக்கை இறுதியானது. நாங்கள் பெலகாவியை விட்டுக்கொடுக்க மாட்டோம். ஏனென்றால், அது கர்நாடகாவின் நிலம். கர்நாடகாவின் ஒரு பகுதி. யாரும் இதை மறுக்க முடியாது.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இருநாட்டு எல்லைப் பகுதியில் மராத்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி பெலகாவி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி. மகாஜன் கமிட்டி பெலகாவி கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதி எனத் தெரிவித்துள்ளது. ஆனால், மகாராஷ்டிரா அதை ஏற்க மறுக்கிறது.