X

BGIS 2026 கிராண்ட் ஃபைனல்ஸ் சென்னையில் தொடங்கியது!

பேட்டில் கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா சீரிஸ் (BGIS) 2026-ன் ஐந்தாவது பதிப்பின் கிராண்ட் ஃபைனல்ஸ் நேற்று சென்னை, வர்த்தக மையத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இது இந்தியாவின் போட்டித்தன்மை வாய்ந்த BGMIகாலண்டரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேதியாகும். முதல் நாளில் ரோண்டோ, எராங்கல் மற்றும் மிராமர் ஆகிய மூன்று வரைபடங்களில் ஆறு போட்டிகள் நடைபெற்றன. இதில், தகுதி பெற்ற 16 அணிகளும் நேரடி பார்வையாளர்கள் மற்றும் கிராஃப்டன் (KRAFTON) இந்தியா ஈஸ்போர்ட்ஸ் யூடியூப் சேனல் வழையாகப் பார்த்துக் கொண்டிருந்த நேயர்களுக்கு முன்னிலையில் விளையாடினார்கள்.

இந்த கிராண்ட் ஃபைனல்ஸில் ஐதராபாத்தில் (மார்ச் 12-15) நடைபெற்ற அரையிறுதியில் முதலிடம் பிடித்த 8 அணிகளும், கடும் அழுத்தம் நிறைந்த சர்வைவல் ஸ்டேஜ் (மார்ச் 16-17) மூலம் முன்னேறி வந்த மேலும் 8 அணிகளும் இணைந்துள்ளன. களத்தில் உள்ள குறிப்பிடத்தக்க அணிகலில் iQOO சோல், காட்லைட் ஈஸ்போர்ட்ஸ், ஓரங்குட்டான், ரெவனண்ட் எக்ஸ்பார்க், ஜெனிசிஸ், வெல்ட் ஈஸ்போர்ட்ஸ்ன் நெபுலா, டீம் தமிழாஸ் மற்றும் வைல்ட் ஃபாங்ஸ் ஆகியவை அடங்கும்.

தொடக்க விழாவில் பேசிய கிராஃப்டன் இந்தியாவின் ஈஸ்போர்ட்ஸ் இணை இயக்குந்0அர் கரண் பதக் பேசுகையில், “BGIS 2026 இன்று BGMI ஈஸ்போர்ட்ஸ் எந்த நினலயில் இருக்கிறது – மிக முக்கியைாக, அது எங்குச் செல்கிறது என்பதைப் பிரதிபலிக்கிறது. வினளயாட்டு பங்கேற்பின் மூலம் ஒரு சமூகம் அதன் சொந்த தொடரின் பரிசுத் தொகையில் கூடுதலாக 2 கோடி ரூபாயைத் திறக்கும்போது (unlock), இந்த சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கியுள்ள ஈடுபாட்டின் ஆழத்தைப் பற்றி அது உங்களுக்கு ஏதோ ஒரு அடிப்படையான விஷயத்தை சொல்கிறது. எங்களது ஈஸ்போர்ட்ஸ் சேனலில் 2 மில்லியன் சந்தாதாரர்கள் மற்றும் நாட்டின் டாப் 16 அணிகள் சென்னைக்கு வருவதையும் இதனுடன் சேர்த்தால், படம் தெளிவாகத் தெரிகிறது. BGIS என்பது இனி ஒரு தொடர் மட்டுமல்ல, இது இந்தியா தனக்காக உருவாக்கி வரும் ஒரு போட்டித்தன்மை வாய்ந்த கேமிங் கலாச்சாரத்தின் மையப்புள்ளி ஆகும்.” என்றார்.

தொடர் இப்போது தொடங்கியுள்ள நிலையில், வரவிருக்கும் நாட்களில் கடுமையான போட்டி, சிறந்த செயல்பாடுகள் மற்றும் இந்தியாவின் முன்னணி BGMI அணிகளின் தலைவிதியைத் தீர்மானிக்கும் முக்கியமான தருணங்கள் அமைய உள்ளன. BGIS 2026-ன் அனைத்துப் போட்டிகளும் கிராஃப்டன் இந்தியா ஈஸ்போர்ட்ஸ் யூடியூப் சேனலில் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, தமிழ், மிசோ மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பப்படும். இந்த கிராண்ட் ஃபைனல்ஸ் தமிழ்நாடு மாநிலத்திற்கு ஒரு பிராந்திய முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. ஏனெனில் உள்ளூர் அணிகளான iQOO டீம் தமிழாஸ் மற்றும் ட்ராய் தமிழன் ஈஸ்போர்ட்ஸ் ஆகியவை தங்களின் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் போட்டியிடுகின்றன.