X

இந்தியன் வங்கியின் 120வது நிறுவன தின இருவாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டன

இந்தியன் வங்கி தனது 120வது நிறுவன தின இருவாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 07.08.2026 அன்று சென்னை தலைமை அலுவலகம், கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள தனது அலுவலகங்கள் வாயிலாக இரத்ததான முகாம்களை நடத்தியது.

வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான திரு. பினோத் குமார், சென்னை கார்ப்பரேட் அலுவலகத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமைத் தொடங்கி வைத்து, தாமும் இரத்ததானம் செய்தார்.

இந்த இரத்ததான முகாம்களில் வங்கி ஊழியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று இரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் திரு. அசுதோஷ் சௌத்ரி மற்றும் திரு. சிவ் பஜ்ரங் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Tags: indian bank