உத்தர பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் குரானா பகுதியில் பெட்வா நதியின் குறுக்கே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு 2 மணியளவில், தொழிலாளர்கள் இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியில் திடீரென கடுமையான சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்துள்ளது.
இதன் காரணமாக, பாலத்தின் பிரம்மாண்ட கான்கிரீட் கட்டுமான பகுதி இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில், 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் போலீசாரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.