X

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பதிவிட்ட மாணவர் மீதான வழக்கு ரத்து!

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள ஈ.வெ.ரா. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட சட்டக் கல்லூரி மாணவர் மீதான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

“இந்துக்களின் உணர்வுகள் புண்படுகின்றன” என்ற ஆதங்கத்தின் அடிப்படையிலேயே அந்த மாணவர் அத்தகைய பதிவை இட்டுள்ளாரே தவிர, அது இரு பிரிவினரிடையே வன்முறையையோ அல்லது வெறுப்புணர்வையோ தூண்டும் நோக்கில் அமைந்ததாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்துவது குற்றமாகாது என்று தெரிவித்த நீதிபதிகள், அந்த மாணவர் மீதான எப்.ஐ.ஆர். (FIR) மற்றும் சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டனர்.