X

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக உள் மாவட்டங்களில் இருந்து வடக்கு உள் கர்நாடகா வரை 900 மீட்டர் உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இ தன் காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்ரல் 2) லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதேபோல், ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அன்றைய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் . சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரியை தாண்டி பதிவாகும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.