சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, ரயில் சேவைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, எழும்பூர் வர வேண்டிய பல ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். குறிப்பாக, ராமேஸ்வரம் – எழும்பூர் இடையேயான இரண்டு முக்கிய விரைவு ரயில்கள் உட்பட மொத்தம் 11 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் இந்த மாற்றங்களைக் கவனித்துத் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.