நாட்டில் யு.பி.ஐ. மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவின் தேசிய பரிவர்த்தனை கழகம் (என்.பி.சி.ஐ.) யு.பி.ஐ.யை மேலாண்மை செய்கிறது. தொலைபேசி கட்டணம், மின்கட்டணம், கடன் கட்டணம் ஆகியவற்றை மாதந்தோறும் செலுத்த ‘ஆட்டோ பே’ என்ற வசதி உள்ளது.
பீம் யு.பி.ஐ., கூகுள் பே, போன் பே போன்ற பல்வேறு செயலிகளில் இருக்கும் ஆட்டோ பே வசதியை ஒரே இடத்தில் மேலாண்மை செய்யும் வசதியை என்.பி.சி.ஐ. கொண்டு வந்துள்ளது. இதற்காக ஒரு தளத்தை உருவாக்கி இருக்கிறது. upihelp.npci.org.in என்ற ஒரே தளத்தில் அனைத்து யுபிஐ செயலிகளில் இருக்க கூடிய ஆட்டோபேவையும் பார்வையிட்டு மேலாண்மை செய்யலாம். இந்த வசதி வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.