தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது நான்காம் கட்டத் தேர்தல் பரப்புரையை இன்று (ஏப்ரல் 10, 2026) தஞ்சாவூரில் தொடங்குகிறார்.
இன்று மாலை 5 மணியளவில் தஞ்சாவூரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அவர், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிக்கிறார். இதனைத் தொடர்ந்து, நாளை (ஏப்ரல் 11) புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று அவர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
ஏற்கனவே மூன்று கட்டப் பரப்புரைகளை முடித்துள்ள முதல்வர், தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் தனது தேர்தல் பயணத்தைத் தொடர்வது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.