தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக தற்போதைய தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜயின் த.வெ.க கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் சென்னையில் போட்டியிடுகிறார்கள். அதிலும், அக்கட்சியின் தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதால் அத்தொகுதி நட்சத்திர தொகுதியாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், திரைப்பட நடிகரும், மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவருமான தக்ஷன் விஜய், சென்னை, பெரம்பூர் தொகுதியில் தனது வேட்பாளரை களம் இறக்கி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் தக்ஷன் விஜய், வைரம் சின்னத்தில் ஆஸ்லின் பெல்மென் என்பவரை தனது வேட்பாளராக நிறுத்தி, அவருக்காக பெரம்பூரில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மதுவற்ற தமிழகம், போதையற்ற இளைஞர் சமுதாயம், தரமான கல்வி. சமமான மருத்துவம், காந்தியம் வென்றிட, நல்லாட்சி மலர்ந்திட, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சியின் சின்னமான ”வைரம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்…” என்ற கோஷத்துடன், பெரம்பூர் தொகுதியில் தனது ஆதரவாளர்களுடன் மின்னல் வேகத்தில் வாக்குகள் சேகரித்து வருகிறார்.
நடிகர் விஜய் நிற்கும் தொகுதியில் நடிகர் தக்ஷன் விஜய் தனது வேட்பாளரை நிறுத்தி, ‘வைரம் சின்னம் ஜொலிக்க’ தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.