X

சென்யார் புயலால் இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 900 ஆக உயர்வு

மலாக்கா நீரிணை மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவான சென்யார் புயல் தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் கரையை கடந்து கனமழை கொடுத்தது.

இந்தோனேசியாவில் ‘சென்யார்’ புயலால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. மேலும்,410 பேர் மயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த வாரத்தில் இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் முழுவதும் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளில் 1,790 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.