X

முதியோர்களான பெற்றோரை பராமரிக்கும் தவறும் பிள்ளைகளுக்கு சொத்து உரிமை மறுப்பு – உத்தரப் பிரதேச அரசு அதிரடி சட்டம்

உத்தரப் பிரதேசத்தில் முதியோர்களான பெற்றோரைக் பராமரிக்காமல் புறக்கணிக்கும் மற்றும் கொடுமைப்படுத்தும் பிள்ளைகளைத் தங்கள் சொத்திலிருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றவும் (Disinherit/Evict), அவர்களின் சொத்து உரிமையை மறுக்கவும் வழிவகுக்கும் புதிய விதிகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2014-ஆம் ஆண்டைய ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல விதிகளில்’ (Rule 22A, 22B, 22C) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய சட்டக் கட்டமைப்பின்படி, பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்கள் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் (DM) நேரடியாகப் புகாரளிக்கலாம். இந்தப் புகார்கள் மீது 30 நாட்களுக்குள் கால வரம்பிற்குட்பட்டு விரைவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முதியவர்கள் எளிதாகத் தொடர்பு கொள்ள விரைவில் இலவசத் தொலைபேசி எண் (Toll-free number) அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்குக் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யவும், குடும்ப உறுப்பினர்களின் பொறுப்புணர்வை அதிகரிக்கவும் கொண்டு வரப்பட்ட இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.