X

9 ஆயிரம் யாத்ரீகர்களைப் பாதுகாப்பாக சிர்பாசா பகுதியில் அழைத்துச் சென்ற பேரிடர் மீட்புப் படையினர்!

கேதர்நாத் பாதயாத்திரைப் பாதையில் அமைந்துள்ள நிலச்சரிவு அபாயம் நிறைந்த சிர்பாசா பகுதியில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) சுமார் 9,000 யாத்ரீகர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வழிநடத்தியுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் நிலச்சரிவு காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய SDRF வீரர்கள் தீவிரமாகப் பணியாற்றினர். பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்படும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பக்தர்கள் எவ்வித அசம்பாவிதமும் இன்றிச் செல்லும் வகையில் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மோசமான வானிலை மற்றும் கடினமான சூழலிலும் பேரிடர் மீட்புப் படையினரின் இந்த விரைவான நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிரமமின்றித் தங்களது புனிதப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: kethrnath