X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை நடைபெற்ற திமுக எம்.பி-க்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

நாளை மறுநாள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும், இக்கூட்டத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.