X

எடப்பாடி பழனிசாமியின் 5ம் கட்ட சுற்றுப்பயணம் தேதி மாற்றம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணத் திட்டத்தில், 29, 30, மற்றும் 4-ந்தேதிகளில் தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, முறையே அக்.2, 3, மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

வரும் 2-ந்தேதி தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி தருமபுரி அரூர், 3-ந்தேதி தருமபுரி, பாலக்கோடு பென்னாகரம், 6 -ந்தேதி நாமக்கல், நாமக்கல் பரமத்தி வேலூர்.

ஏற்கெனவே 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் நடைபெறுவதாக அறிவித்திருந்த பிரசாரக் கூட்டம், அதே தேதியில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.