X

எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்!

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பான முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள அவர் தனது இல்லத்திலிருந்து சென்னை விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டார். கடந்த மார்ச் 2-ஆம் தேதியும் அமித் ஷாவைச் சந்தித்த நிலையில், தற்போது நடைபெறவுள்ள இந்த இரண்டாவது சந்திப்பு, கூட்டணியை இறுதி செய்வதற்கான ஒரு முக்கிய முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.

பாஜக தரப்பில் பியூஷ் கோயல் நாளை சென்னை வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக டெல்லியில் இபிஎஸ் மற்றும் அமித் ஷா இடையேயான இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.