X

ராணுவ வீரர்களுக்காக ரூ.60 லட்சம் மதிப்பிலான உயில் ஆவணத்தை வழங்கிய மதுரை முதியவர்

மதுரை ஹார்விபட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மதுரா கோட்ஸ் நிறுவன ஊழியரான சுப்பையா (82), மனைவி மறைந்த நிலையில் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் யாருமின்றித் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நாட்டின் எல்லை காக்கும் ராணுவ வீரர்களுக்காகத் தனது வங்கிச் சேமிப்புக் கணக்கில் உள்ள ரூ.30 லட்சம் டெபாசிட் தொகை மற்றும் லாக்கரில் உள்ள ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கப் பொருட்கள் ஆகியவற்றுக்கான உயில் ஆவணத்தையும், ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையையும் கொடிநாள் நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணாவிடம் வழங்கியுள்ளார்.

மேலும், இவர் கடந்த 2013-ஆம் ஆண்டிலேயே தனது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக எழுதி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைதீர்க்கும் கூட்டத்தில் இவர் ரூ.60 லட்சம் மதிப்பிலான உயில் ஆவணத்தை வழங்கியதைக் கண்டு நெகிழ்ந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அங்கு இருந்த அனைத்து அரசு அதிகாரிகளும் உடனடியாக எழுந்து நின்று கைதட்டித் தங்களது மரியாதையையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Tags: armyMadurai