X

கிறிஸ்த்தவ, இஸ்லாமிய மத வழிபாட்டு தளங்களில் நடக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் தடுக்க வேண்டும் – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

கிறிஸ்த்தவ மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தளங்களில் நடக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கூட்டங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன

இந்த நிலையில், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் முரணாகவும், தமிழகத்தில் சில கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான சர்ச் மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதிகளில் கூட்டங்கள் நடத்தி, குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென ஃபத்வா மத கட்டளை அடிப்படையிலான அரசியல் நடவடிக்கைகள் கிறிஸ்தவ பாதிரியார்களாலும் இஸ்லாமிய மத குருமார்களாலும் மேற்கொள்ளப்படுவதாக எங்களது கவனத்திற்கு வருகிறது

குறிப்பாக, சில தொகுதிகளில் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், சர்ச் மற்றும் மசூதிகளில் கூட்டங்கள் நடத்தி திமுக கூட்டணி கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று மத அடிப்படையில் மக்களை மூளைச்சலவை செய்கிறார்கள் அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்கு செலுத்தக் கூடாது என்றும் உத்தரவு போடுகிறார்கள் எனத் தகவல்கள் கிடைக்கின்றன

மேலும், சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், குறிப்பாக Udhayanidhi Stalin மற்றும் Joseph Vijay போன்றோர், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் மத அடிப்படையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது

கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகளின் முன்பாக பிரார்த்தனை கூட்டங்கள் முடிந்து வருகின்ற இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களிடம் அதிமுக பாஜக கூட்டணியை சார்ந்தவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக் கூடாது என்று தடை செய்கிறார்கள். திமுகவிற்கு மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதி என்றும் சர்ச் மசூதி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறலாகும்

இஸ்லாமியர்கள் பெரும்பாலாக வசிக்கும் பகுதியில் அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க தடை விதிக்கப்படுகிறது இஸ்லாமிய பெருமக்கள் நிறைய இருக்கிறார்கள் ஆனால் இப்பகுதிகளில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தடை செய்வோம் என்று சொல்லக்கூடிய அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரங்களை சிறப்பு ஜெபக்கூட்டங்களை சர்ச்சுகளில் கிறிஸ்தவ மத போதகர்கள் நடத்துகிறார்கள்

இத்தகைய செயல்கள், Representation of the People Act, 1951 சட்டத்தின் பிரிவு 123 (Corrupt Practices) படி மத அடிப்படையில் வாக்கு கேட்பது தடைசெய்யப்பட்டுள்ளதற்கு முரணானதாகும்

மேலும், Election Commission of India வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, மத இடங்களில் இருந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது தவிர்க்கப்பட வேண்டியது ஆகும்

மேற்கண்ட சூழ்நிலையில், இத்தகைய செயல்களில் ஈடுபடும் தனிநபர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்து மக்கள் கட்சி – தமிழகம் சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.