X

அரசு பள்ளி மாணவர்கள் இடையே கோஷ்டி மோதல்! – 13 மாணவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

நெல்லை அரசு பள்ளியில் மாணவர்களிடையே கோஷ்டி மோதம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். இருதரப்பையும் சேர்ந்த 13 மாணவர்களை கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

அரசு பள்ளியில் 2 நாட்களுக்கு முன்பு மாணவர்கள் கோஷ்டியாக பிரந்து மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, இருதரப்பையும் சேர்ந்த 13 மாணவர்களை கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.