X

அனுமதி பெறாமல் இயங்கும் பைக் டாக்சிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் – உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தகவல்

தமிழ்நாட்டில் சட்டப்பூர்வ அனுமதி பெறாமல் விதிகளை மீறி இயங்கும் இருசக்கர பைக் டாக்சிகளுக்கு ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பைக் டாக்சிகளுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் போது, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், மோட்டார் வாகனச் சட்டங்களைப் பின்பற்றாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், பைக் டாக்சிகளை முறைப்படுத்துவது அல்லது தடை செய்வது தொடர்பான கொள்கை முடிவுகள் குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.