X

நுங்கம்பாக்கம் ‘நடைபாதை பிளாசா’ திட்டத்தின் முதல் வான்வழிக் காட்சிகள் வெளியீடு!

சென்னை நுங்கம்பாக்கத்தின் முக்கிய அடையாளமான காதர் நவாஸ் கான் (KNK) சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘நடைபாதை பிளாசா’ (Pedestrian Plaza Project) திட்டத்தின் முதல் வான்வழிக் காட்சிகள் (Aerial View) தற்போது வெளியாகியுள்ளன.

பாண்டி பஜார் நடைபாதை பிளாசா திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சர்வதேசத் தரத்திலான உள்கட்டமைப்புடன் இச்சாலை மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. அகலமான நடைபாதைகள், நவீன மின்விளக்குகள், இருக்கை வசதிகள் மற்றும் பசுமையான மரக்கன்றுகளுடன் இச்சாலை உருமாறி வருவதை இந்த வான்வழிக் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.

பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், சென்னையின் முக்கிய வணிக மற்றும் பொழுதுபோக்குத் தளமான கே.என்.கே சாலையை மேலும் மெருகேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட உள்ளது.