முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாளை (சத்பாவனா திவஸ்) முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ‘வீர் பூமி’யில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகிய தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.
பாரதத்தின் நவீனமயமாக்கல், தகவல் தொழில்நுட்பப் புரட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட ராஜீவ் காந்தியின் தொலைநோக்குச் சிந்தனைகளை இந்நாளில் நினைவுகூர்வதாகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.