தமிழகத்தில் 1வது முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 2025-2026 கல்வியாண்டின் முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் பணிகளைக் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி 16-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
வகுப்பு வாரியான தேர்வு தேதிகள்:
1 வது முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8, 2026 தேர்வுகள் தொடங்கி ஏப்ரல் 16, 2026 தேர்வுகள் முடிவடைகிறது.
4 வது மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6, 2026 தேர்வுகள் தொடங்கி ஏப்ரல் 16, 2026 தேர்வுகள் முடிவடைகிறது.
தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதியோடு நிறைவடைவதால், மாணவர்களுக்கு ஏப்ரல் 17, 2026 முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. ஏப்ரல் 23-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், பள்ளி வளாகங்கள் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட உள்ளன. இதைக் கருத்தில் கொண்டே ஏப்ரல் 16-க்குள் தேர்வுகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
2026-2027 புதிய கல்வியாண்டிற்கான பள்ளிகள் தொடங்கும் நாள் ஜூன் 1, 2026 (திங்கட்கிழமை) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 வது முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் மதிப்பீட்டுத் தேர்வுகள் நடைபெறும். 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.