பிராண்டட் ஆடைகள், விளம்பரப் பொருட்கள் மற்றும் சந்தைப்படுத்தல் தீர்வுகளில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டான ஃபுல்லி புரோமோட்டட், இந்திய சந்தையில் தனது நுழைவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. யுனைடெட் ஃபிரான்சைஸ் குழுமத்துடன் (UFG) இணைந்து, இந்நிறுவனம் தனது உலகளாவிய விரிவாக்க உத்தியில் ஒரு முக்கியபடியாக, சென்னை, டி. நகரில் தனது இந்திய முதன்மை விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளது.
பல பிராண்ட் ஃபிரான்சைசிங்கில் விரிவான அனுபவம் கொண்ட சுரேஷ் ரகுராஜ் மற்றும் தீபிகா லோகநாதன் ஆகியோர் இந்த இந்திய மாஸ்டர் ஃபிரான்சைஸை வழி நடத்துவார்கள். இவர்கள் ஆஸ்திரேலியாவில் ஃபுல்லி புரோமோட்டடின் மாஸ்டர் ஃபிரான்சைஸ் பார்ட்னர்களாகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து, இந்தியாவின் வேகமாக விரிவடைந்து வரும் வணிகச் சந்தைக்கு உயர்தர பிராண்டட் ஆடைகள், கார்ப்பரேட் பரிசுகள் மற்றும் பிரீமியம் விளம்பரத்தீர்வுகளை அறிமுகப்படுத்தி, இந்தியா முழுவதும் இந்த பிராண்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வார்கள்.
இந்தத் தொடக்க விழாவில், ஃபோர்குரா ஏஐ-யின் தலைவரும், தமிழ் கலாச்சார அகாடமியின் நிறுவனரும், கோல்ட் ஆர்ட் ஜுவல்லரியின் சிஎம்டி-யுமான ஜெகதேஷ் கடவுல் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
எதிர்காலத்திற்குத் தயாரான செயல்பாடுகளை நோக்கிய ஒரு முக்கியபடியாக, ஃபுல்லி புரோமோட்டட் இந்தியா, தீபிகா லோகநாதன் இணைந்து நிறுவிய ஹைவ் ஆஸ்திரேலியா மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த செயல்பாட்டு ஆதரவை ஒருங்கிணைக்க உள்ளது.
இந்த அறிமுகம், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிராண்டை மேம்பட்ட AI திறன்களுடன் இணைப்பதன் மூலம், உலகத்தரம் வாய்ந்த ஃபிரான்சைஸ் வாய்ப்புகளை இந்தியாவிற்குக் கொண்டு வருகிறது. ஹைவ்-இன் AI ஜென்ட்கள் மற்றும் வைப் ஸ்டுடியோ தளங்கள் அனைத்து ஃபிரான்சைஸ் கிளைகளிலும் பயன்படுத்தப்படும். இது உரிமையாளர்களை மேம்பட்ட கருவிகள், நெறிப்படுத்தப்பட்ட பணிப்பாய்வுகள் மற்றும் நிகழ்நேர வணிக நுண்ணறிவுகளுடன் செயல்பட உதவும்.
இது இந்திய ஃபிரான்சைஸ் சூழலில் ஒரு தனித்துவமான முதல் முயற்சியாகும். உலகளவில் நிரூபிக்கப்பட்ட, AI-ஆற்றல் பெற்ற செயல்பாட்டுச் சிறப்பை சந்தைக்குக் கொண்டு வருவதன் மூலம், புல்லி புரோமோட்டட் இந்தியாவை புதுமையின் முன்னணியில் இது நிலை நிறுத்துகிறது.
சென்னையில் முதன்மை கிளை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஃபுல்லி புரோமோட்டட் முக்கிய பெருநகர சந்தைகளுக்கு விரிவடைய உள்ளது. பெங்களூரு, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகியவை அடுத்த முக்கிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த பிராண்ட், உலகளவில் நிரூபிக்கப்பட்ட ஃபிரான்சைஸ் மாதிரியில் சேர, லட்சியம் கொண்ட தொழில் முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்களை இப்போது தீவிரமாக அழைக்கிறது. 11க்கும் மேற்பட்ட நாடுகளில், உலகெங்கிலும் 300 க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட ஒரு அமைப்பிலிருந்து கூட்டாளர்கள் பயனடைவார்கள். இதற்கு வலுவான செயல்பாட்டு ஆதரவும், விரிவாக்கக் கூடிய வணிக வாய்ப்புகளும் பக்கபலமாக உள்ளன. ஒவ்வொரு இடத்திலும் சீரான பிராண்ட் சிறப்பை வழங்கும் ஒரு உலகளாவிய வலையமைப்பை உருவாக்குவதை ஃபுல்லி புரோமோட்டட் நோக்கமாகக் கொண்டுள்ளது.