கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்று, கொடூரமான முறையில் படுகொலை செய்து குளக்கரையில் வீசியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமல்லாமல் சமூகத்தின் அடிப்படை மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் அவலநிலையை ஏற்படுத்தியிருப்பது வேதனை அளிக்கிறது.
எனவே, இந்த மனிதநேயமற்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட மிருகங்களை உடனடியாகக் கைது செய்து அவர்கள் மீது சமரசமற்ற முறையில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.