தங்கம் விலை எகிறி வந்து, பின்னர் மளமளவென சரிந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லாமல், ஏற்ற-இறக்கத்துடனேயே நீடிக்கிறது. அந்த வகையில் கடந்த 1-ந்தேதி முதல் விலை உயர்ந்து வந்து, நேற்று குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,180-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 440-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 163 ரூபாய்க்கும் கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.