X

தங்கம் விலை குறைந்தது – ஒரு சவரன் ரூ.ரூ.91,600-க்கு விற்பனை

தங்கம் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கு விற்பனை ஆனது. இது இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இருந்தது. மேலும் விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் அந்த விலையில் திடீரென்று சரியத் தொடங்கியது.

கடந்த 24-ந்தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. நேற்றும் ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,450-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.91,600-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.170-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.