தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போரினால் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி, கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை சரிந்தது. அதாவது கிராமுக்கு ரூ.670 குறைந்தது. தொடர்ந்து நேற்று மாலை ரூ.280 குறைந்தது. அதாவது ஒரே நாளில் கிராமுக்கு ரூ.950 குறைந்தது. சவரனுக்கு ரூ.7600 குறைந்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.12,670-க்கும், ஒரு சவரன் ரூ.1,1360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதற்கிடையே, நேற்று மாலை திடீரென்று அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை, கிராமுக்கு ரூ.670 உயர்ந்து ரூ.13,340-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.5,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபணரத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,720 குறைந்து ரூ.1,04,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.340 குறைந்து ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.