தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களுடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.11,540-க்கும், சவரன் ரூ.92,320-க்கும் விற்பனையானது. நேற்று கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ1,120-ம் விலை குறைந்தது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,400-க்கும், சவரன் ரூ.91,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 2-வது முறையாக மீண்டும் உயர்ந்தது. இன்று காலை சவரனுக்கு ரூ.800 கூடிய நிலையில், தற்போது மேலும் ரூ.800 கூடியது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று ஒரே நாளில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
வெள்ளி விலையும் இன்று 2 முறை உயர்ந்துள்ளது. காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்த நிலையில் மாலையில் மேலும் 3 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.176-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.